Friday, September 2, 2011

ஆடியில தள்ள்ளுபடி

ஆடியில தள்ளுபடி
ஆடையெல்லாம் பறக்குதுன்னு
ஓடிவந்து வாங்கச்சொல்லி
ஒலிபெருக்கி வச்சாங்க
தேடிப்போயித் தெனாவட்டா
தெளிஞ்சு எடுக்கமுடியல!
தள்ளிமுள்ளி உள்ளபோயி
தரம்பாக்க முடியல
அள்ளிக்கிட்டுப் போறசனம்
அடிபுடியா இருக்குது!
உள்ளபிரிச்சுப் பாத்தாக்க...

கோடிச்சேலைக் குள்ளஒரு
கோடுபோல அழுக்கிருக்கு!
மடிப்புக்குள்ள பொட்டுப்போல
குட்டிக்குட்டி ஓட்டை இருக்கு!!

தள்ளுபடி தள்ளுபடின்னு
தள்ளாத வயசுலநாம
தள்ளாடி வாங்கப்போனா..
தள்ளியே விட்டுட்டாங்க!

தள்ளுபடியே வேணாமுங்க
தள்ள்ளியே இருப்போமுங்க!
வழக்கம்போல புதுச்சேலய
தறிக்கிப்போயி வாங்கலாங்க.

என்னநாஞ் சொல்லுறது
எல்லாருக்கும் நல்லாருக்கா?!

நான் பிறந்து இத்தனை ஆண்டுகளில்
ஒருமுறைகூட தள்ளுபடியில்
எந்தசாமானும் வாங்கியதில்லை
இப்போதுதான் முதல்முறையாக
சேலைவாங்கிவந்த அனுபவம் இது!

1 comment:

Rathnavel Natarajan said...

நிஜம் தான். ஆடித்தள்ளுபடி என்றால் கூட்டம் அலைமோதுகிறது. தேவைக்கு வாங்குவார்களா, தள்ளுபடிக்கு வாங்குவார்களா என்று தெரியவில்லை. ஆனால் வியாபாரிகள் தள்ளி விடுகிறார்கள் என்பது நிஜம்.
உங்களது அனுபவம் பேசுகிறது.
நிறைய எழுதுங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் அம்மா.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...